கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் பின்னடைவு

கேரளாவில் காங்கிரஸ் கூட்டணி முன்னிலையில் உள்ளது.
கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் பின்னடைவு
Published on

திருவனந்தபுரம்,

140 தொகுதிகளை கொண்ட கேரள சட்டசபைக்கு கடந்த மாதம் 9ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. கேரளாவில் பெரும்பான்மைக்கு 71 தொகுதிகளை கைப்பற்ற வேண்டும்.

கேரள தேர்தலில் இடது ஜனநாயக முன்னணி (இடதுசாரிகள்), ஐக்கிய ஜனநாயக கூட்டணி (காங்கிரஸ் கூட்டணி), பாஜக கூட்டணி என 3 முனை போட்டி நிலவுகிறது. தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.

இந்தநிலையில், கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் தர்மடம் சட்டசபை தொகுதியில் பின்னடைவை சந்தித்துள்ளார். மூன்று சுற்றுகள் எண்ணி முடிக்கப்பட்டிருக்கும் நிலையில், பினராயி விஜயன் 2812 வாக்குகள் பின்னடைவில் உள்ளார். காங்கிரஸ் வேட்பாளர் அப்துல் ரஷீத் முன்னிலையில் உள்ளார். 140 தொகுதிகளில் 87 இடங்களில் காங்கிரஸ் கூட்டணி முன்னிலையில் உள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com