

திருவனந்தபுரம்,
கேரளம் மாநிலத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி 10 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சியை கைப்பற்றி யது. காங்கிரஸ் கட்சி 63 இடங்களை வென்றது.நீண்ட இழுபறிக்கு பிறகு கேரள முதல்-மந்திரியாக வி.டி.சதீசன் தேர்வு செய்து காங்கிரஸ் மேலிடம் அறிவித்தது. அவர் நாளை முதல்-மந்திரியாக பதவி யேற்கிறார்.வி.டி.சதீசனுடன் 21 பேர் கொண்ட மந்திரி சபையும் பதவியேற்கலாம் என்று எதிர்பார்க்கப் படுகிறது. காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 11 பேரும், கூட்டணி கட்சியான இந்திய ஒன்றிய முஸ்லிம் லீக்கில் இருந்து 5 பேரும் இடம்பெறு கிறார்கள்.
ஐக்கிய ஜனநாயக முன்னணி அமைச்சரவை யில் மீதமுள்ள இடங்களைத் தீர்மானிப்பதற்காக இந்திரா பவனில் ஆலோசனை நடைபெற்றது. வி.டி.சதீசன், சன்னி ஜோசப் மற்றும் தீபாதாஸ் முன்ஷி ஆகியோர் இதில் பங்கேற்றனர். விடி சதீசன் பதவியேற்பு விழா நாளை காலை 10 மணிக்கு நடைபெறுகிறது. இந்த விழாவில் பங்கேற்க தமிழக முதல் அமைச்சர் விஜய்க்கும் அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. இந்த அழைப்பை ஏற்று விஜய் பங்கேற்பார் என எதிர்பார்க்கபப்ட்ட நிலையில் விஜய் பயணம் ரத்து செய்யப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.