தமிழ் மக்களுக்கு கனிவான பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்; கேரள முதல்-மந்திரி தமிழில் பொங்கல் வாழ்த்து

தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் விழா இன்று கொண்டாடப்பட்டு வருகிறது.
திருவனந்தபுரம்,
தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் விழா தமிழகம் மட்டுமின்றி உலகம் முழுவதும் உள்ள தமிழர்களால் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. பொங்கல் திருநாளையொட்டி அரசியல் கட்சி தலைவர்கள் உள்பட பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், தமிழக மக்களுக்கு கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் பொங்கல் திருநாள் நல்வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில்,
அன்புநிறை தமிழக மக்களுக்கு எனது கனிவான பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்!
உழைப்பின் உன்னதத்தையும், இயற்கையின் கொடையையும் போற்றும் உன்னதத் திருவிழாவான இந்தப் பொங்கல் நன்னாள், நம் அனைவரது வாழ்விலும் புதிய ஒளியை ஏற்றி வைக்கட்டும்.
இந்த அறுவடைப் பண்டிகை, மக்களிடையே நல்லிணக்கம், மகிழ்ச்சி மற்றும் பகிரப்பட்ட செழிப்பு ஆகிய பிணைப்புகளை மேலும் வலுப்படுத்த வேண்டும் என விழைகிறேன்.
ஒரு சமூகம் முழுமையான வளர்ச்சியை அடைய வேண்டுமானால், அங்கு சமத்துவமும் நீதியும் நிலைபெற வேண்டும். அந்த வகையில், இந்தப் பொங்கல் திருநாள்:
அனைவருக்கும் சமமான நீதி கிடைக்கவும், ஒவ்வொரு மனிதரும் தகுந்த கண்ணியத்துடன் வாழ்வதை உறுதி செய்யவும், அனைவரது நல்வாழ்விற்காகவும் நாம் அனைவரும் சாதி, மத பேதமின்றி ஒன்றிணைந்து செயல்பட ஊக்கமளிக்கட்டும்.
இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.






