கேரள முதல் மந்திரி காவல்துறை மீதான கட்டுப்பாட்டை இழந்துவிட்டார் - காங்கிரஸ் மூத்த தலைவர் சென்னிதலா

கேரள முதல் மந்திரி பினராயி விஜயன், அம்மாநில காவல்துறை மீதான கட்டுப்பாட்டை இழந்துவிட்டதாக ரமேஷ் சென்னிதலா கூறியுள்ளார்.
கேரள முதல் மந்திரி காவல்துறை மீதான கட்டுப்பாட்டை இழந்துவிட்டார் - காங்கிரஸ் மூத்த தலைவர் சென்னிதலா
Published on

திருவனந்தபுரம்,

கேரள முதல் மந்திரி பினராயி விஜயன், அம்மாநில காவல்துறை மீதான கட்டுப்பாட்டை இழந்துவிட்டதாக காங்கிரஸ் மூத்த தலைவர் ரமேஷ் சென்னிதலா கூறியுள்ளார்.

கொலைக் குற்றங்கள் அதிகரித்து வருவதாகக் கூறிய சென்னிதலா, அவற்றைக் கட்டுப்படுத்துவதில் உள்துறை பொறுப்பில் உள்ள முதல் மந்திரி படுதோல்வி அடைந்துவிட்டார் என்று கூறினார்.

முன்னாள் உள்துறை மந்திரியான சென்னிதலா, போதைப்பொருள் தொடர்பான வழக்குகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதையும், பல முக்கியமான வழக்குகளில் காவல்துறை பின்தங்கி இருப்பதையும் குறிப்பிட்டார்.

மேலும் அவர், காவல்துறையின் செயல்பாடுகளில் முதல் மந்திரிக்கு பிடிப்பு இருப்பதாக தெரியவில்லை என்று கூறினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com