மருத்துவ சிகிச்சைக்காக அமெரிக்கா செல்கிறார் கேரள முதல் மந்திரி பினராயி விஜயன்

மருத்துவ சிகிச்சைக்காக கேரள முதல் மந்திரி பினராயி விஜயன் அமெரிக்கா செல்ல உள்ளார்.
மருத்துவ சிகிச்சைக்காக அமெரிக்கா செல்கிறார் கேரள முதல் மந்திரி பினராயி விஜயன்
Published on

திருவனந்தபுரம்,

கேரள முதல் மந்திரி பினராயி விஜயன் மருத்துவ சிகிச்சை பெறுவதற்காக, அடுத்த மாதம் அமெரிக்கா செல்கிறார். இது தொடர்பாக முதல் மந்திரியின் அலுவலக வட்டார தகவல்கள் கூறியதாவது:-

முதல் மந்திரி பினராயி விஜயன் அமெரிக்காவில் உள்ள மேயோ கிளினிக்கில் சிகிச்சை பெறவுள்ளார். அவர் ஆகஸ்ட் மாதம் 19-ஆம் தேதி அமெரிக்கா செல்கிறார். அவருடைய பயணத்துக்கு தேவையான ஒப்புதல்கள் மத்திய அரசிடம் இருந்து பெறப்பட்டு விட்டன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

73- வயதான பினராயி விஜயனுக்கு சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் கடந்த மார்ச் மாதம் 3 ஆம் தேதி வருடாந்திர மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.

X

Daily Thanthi
www.dailythanthi.com