கேரளாவில் கல்வி மந்திரி ராஜினாமா கோரிக்கை நிராகரிப்பு; சட்டசபையை எதிர்க்கட்சிகள் புறக்கணித்தன

கேரள சட்டசபையில் 2015-ம் ஆண்டு பெரும் அமளி ஏற்பட்டது. பொதுச்சொத்துக்கு சேதம் விளைவிக்கப்பட்டது. இது தொடர்பாக மார்க்சிய கம்யூனிஸ்டு கட்சி தலைமையிலான இடதுசாரி எம்.எல்.ஏ.க்கள் மீது தொடரப்பட்ட வழக்கை திரும்பப்பெற முடியாது என சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.
கேரளாவில் கல்வி மந்திரி ராஜினாமா கோரிக்கை நிராகரிப்பு; சட்டசபையை எதிர்க்கட்சிகள் புறக்கணித்தன
Published on

இதையொட்டி கேரள சட்டசபையில் நேற்று ஜனநாயக முற்போக்கு கூட்டணியை சேர்ந்த காங்கிரஸ் கட்சி தலைமையிலான எதிர்க்கட்சிகள் கேள்விநேரத்தின்போது பிரச்சினை எழுப்பின. பொதுச்சொத்துகளை சேதப்படுத்தியதாக குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ள கல்வி மந்திரி சிவன்குட்டி பதவி விலக வேண்டும் என்று அவை வலியுறுத்தின. ஆனால் அதை முதல்-மந்திரி பினராயி விஜயன் நிராகரித்தார். அதுமட்டுமின்றி சிவன்குட்டி உள்ளிட்டவர்கள் மீதான வழக்கை வாபஸ் பெறக்கோரி சுப்ரீம் கோர்ட்டை இடதுசாரி அரசு நாடியதை அவர் நியாயப்படுத்தினார்.

இதில் அதிருப்தியும், ஆத்திரமும் அடைந்த எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்ததுடன், நேற்றைய சபை நடவடிக்கைகளை புறக்கணிப்பதாகவும் அறிவித்தன.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com