

கோழிக்கோடு
அமெரிக்காவுக்கு எதிராக அணு ஆயுத தாக்குதலை முன்னெடுக்கும் வகையில் பட்டனை தாம் தயார் நிலையில் வைத்துள்ளதாக வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன் கூறினார். அதற்கு பதில் அளித்த அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் வடகொரியாவை விட பெரியதும் சக்திவாய்ந்த பட்டன் தன்னிடம் உள்ளதாக கூறினார்.
வடகொரியாவும்- அமெரிக்காவும் ஒருவரை ஒருவர் அணுஆயுத தாக்குதல் நடத்துவதாக கூறி மிரட்டை வருகின்றனர்.
இந்த நிலையில் கேரள முதல்வர் பிணராய் விஜயன் அமெரிக்க அழுத்தத்தை எதிர்கொள்வதில் வடகொரியா வெற்றி பெற்று உள்ளது என கூறி உள்ளது விமர்சனத்தை ஏற்படுத்தி உள்ளது.
சிபிஎம் கோழிக்கோடு மாவட்டக் குழு கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய முதல்-அமைச்சர் பிணராய் விஜயன் கூறியதாவது:-
வட கொரியா அமெரிக்காவுக்கு எதிராக கடுமையான எதிர்ப்பை தொடர்ந்து வருகிறது. அமெரிக்காவால் ஏற்படுத்தபட்ட அழுத்தத்தை வடகொரியா எதிர்கொள்வதில் வெற்றி பெற்று உள்ளது. இதில் சீனாவை விட வட கொரியா சிறப்பாக செயல்பட்டு உள்ளது.
ஏகாதிபத்திய சக்திகளுக்கு எதிரான சீனாவின் போராட்டம் மக்களுடைய எதிர்பார்ப்புகளுக்கு தகுந்தது போல் இல்லை.என கூறினார்.
தென் இந்திய மாநிலத்தை சேர்ந்த ஒரு முதல் அமைச்சர் இவ்வாறு பேசி இருப்பது விமர்சனத்தை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த டிசமபர் மாதம் கேரள மாநில நெடும்கண்டம் பகுதியில் சிபிஎம்
கட்சியினரால் ஒட்டபட்ட போஸ்டரில் வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன் படம் இடம் பெற்று இருந்தது. அந்த போஸ்டர் மாநில நிர்வாகிகளை அழைத்து ஒட்டப்பட்டு இருந்த போஸ்டராகும்.
#pinarayivijayan / #kimjongun / #northkorea / #missileprogrammes/ #donaldtrump