கேரளம்: முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட காங்கிரஸ்

சட்டப்பேரவை தேர்தலையொட்டி முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை கேரள காங்கிரஸ் வெளியிட்டுள்ளது.
கேரளம்: முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட காங்கிரஸ்
Published on

திருவனந்தபுரம்,

பா.ஜ.க.வைத் தொடர்ந்து கேரள காங்கிஸ் நடைபெறவிருக்கும் சட்டமன்ற தேர்தலையொட்டி, 55 பேர்கொண்ட தனது முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது.

பாலக்காடு மற்றும் திரிபுணித்துறை ஆகிய இரண்டு தொகுதிகளைத் தவிர, மற்ற அனைத்து தொகுதிகளிலும் தற்போதைய எம்.எல்.ஏக்களுக்கே மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. முன்னாள் முதல்-அமைச்சர் உம்மன் சாண்டியின் மகன் சாண்டி உம்மன் புதுப்பள்ளி தொகுதியில் நிறுத்தப்பட்டுள்ளார்.

திருவனந்தபுரம் மாவட்டத்தில் மூன்று தொகுதிகளுக்கு மட்டுமே வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். உட்கட்சி பூசலால் பல தொகுதிகளுக்கு இன்னும் வேட்பாளர்கள் இறுதி செய்யப்படவில்லை.

நாடாளுமன்ற உறுப்பினர்கள் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடக் கூடாது என்ற மேலிடத்தின் முந்தைய உத்தரவும், சில தொகுதிகளில் வேட்பாளர் அறிவிப்பு தாமதமாகக் காரணமாகியுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com