மணமகன் தேவை விளம்பரம் மூலம் 10 ஆண்களை திருமணம் செய்த கல்யாண ராணி

இந்தியாவின் கேரளா மாநிலத்தில் பணத்துக்காக பெண் ஒருவர் பத்து திருமணங்கள் செய்துள்ள சம்பவம், அவரது கணவர்களில் ஒருவரால் அம்பலமாகியுள்ளது.
மணமகன் தேவை விளம்பரம் மூலம் 10 ஆண்களை திருமணம் செய்த கல்யாண ராணி
Published on

கேரள பத்திரிகை ஒன்றில் வெளியான மணமகள் தேவை விளம்பரத்தில் 'கணவனை இழந்த இளம்விதவைக்கு மணமகன் தேவை' என குறிப்பிட்டிருந்தது.

பெண்ணின் படமும் செல்போன் எண்ணும் தரப்பட்டிருந்தது. இளைஞர் ஒருவர் விளம்பரம் தந்திருந்த ஷாலினி என்ற பெண்மணியை தொடர்பு கொண்டார்.

ஷாலினியின் பேச்சில் மயங்கிய இளைஞர், கணவனை இழந்ததான் பெங்களுருவில் சாப்ட்வேர் இன்ஜினியர் என்றும் விரைவில் கேரள நீதிமன்றத்தில் வேலை கிடைக்கப் போவதாகவும், அவர் கூறியதை நம்பினார்.

இதனிடையே தனக்கு உறவு என்று யாருமில்லை எனக்கூறி கண்ணீர் சிந்திய ஷாலினி, கல்யாண நாளையும் குறிக்க வைத்தார். திருமணத்தில் மணமகன் வீட்டார் மட்டும் பங்கேற்றனர். அப்போது திருமணத்திற்கு வந்த ஒருவருக்கு ஏதோ சந்தேகம் ஏற்பட, உடனே தன் நண்பருக்கு போன் செய்து வரவழைத்துள்ளார்.

வந்தவர் வேறு யாருமல்ல.. ஷாலினியின் கணவர். இதனையடுத்து காவல்துறையின் உதவியை நாடியுள்ளார் அந்த நபர். அவர்கள் ஷாலினியை விசாரித்தபோது இன்னும் பல அதிர்ச்சி தகவல் வெளியாகின.

ஷாலினி இதுபோன்று மணமகன் தேவை விளம்பரங்கள் மூலம் இதுவரை 10 திருமணங்களை செய்த விவரம் தெரியவந்தது.

விளம்பரத்தின் மூலம் இளைஞர்களை மயக்கி திருமணம் செய்துகொண்டு அன்றிரவே பணம் நகைகளுடன் எஸ்கேப் ஆகி விடுவது ஷாலினியின் வழக்கமாம்.

கடந்த 2014 ம் ஆண்டு நாயர் என்பவரை ஏமாற்றித் திருமணம் செய்த ஷாலினி தமிழகத்தில் பழனிக்கு தப்பிவந்தது குறிப்பிடத்தக்கது. அப்போது பழனிக்கு வந்து போலீசார் ஷாலினியை கைது செய்தனர்.

கேரளாவில் 5 இடங்களில் அவர் மீது திருமண மோசடி வழக்குகள் பதிவாகியுள்ளதாக கூறப்படுகிறது. சொகுசாக வாழ ஆசைப்பட்ட ஷாலினி இப்போது சிறைக்கம்பிகளை எண்ணிக்கொண்டிருக்கிறார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com