

திருவனந்தபுரம்,
கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 5,080 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மாநிலத்தில் தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை 50 லட்சத்து 89 ஆயிரத்து 175 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்று பாதிப்புக்கு மேலும் 196 பேர் உயிரிழந்துள்ளனர். தொற்று பாதிப்பால் இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 37,495 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா பாதிப்பில் இருந்து இன்று குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 7,908 ஆக உள்ளது. இதுவரை குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 50,04,786 ஆக உயர்ந்துள்ளது. தொற்று பாதிப்பைக் கண்டறிய கடந்த 24 மணி நேரத்தில் 53,892 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன.
தொற்று பாதிப்புடன் சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 58,088 ஆக உயர்ந்துள்ளது. கேரளாவில் மொத்தம் உள்ள 14 மாவட்டங்களில் அதிகபட்சமாக எர்ணாகுளம் மாவட்டத்தில் 873 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.