வெளிநாட்டில் படித்து வந்த மகன் விபத்தில் இறந்த செய்தியைக் கேள்விப்பட்ட தாய் தற்கொலை

மகன் இறந்த சோகத்தில் இருந்த அவர் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

ஆலப்புழா,

வெளிநாட்டில் படித்து வந்த மகன் விபத்தில் இறந்த செய்தியைக் கேள்விப்பட்ட தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் ஆலப்புழா, மாவேலிக்கராவில் உள்ள அரசு மாவட்ட மருத்துவமனையில் காது, மூக்கு, தொண்டை (ENT) மருத்துவ நிபுணராக பணியாற்றி வந்தவர் டாக்டர் மெஹ்ருன்னிசா (48 வயது). இவரது மூத்த மகன் கனடாவில் படித்து வந்துள்ளார். சமீபத்தில் அவர் கனடாவில் விபத்தில் சிக்கி உயிரிழந்தார்.

மகன் இறந்த செய்தியைக் கேள்விப்பட்ட மெஹ்ருன்னிசா மிகுந்த சோகத்தில் இருந்துள்ளார். இந்த நிலையில் அவரது கணவரும் இளைய மகனும் வீட்டில் இல்லாத நேரத்தில் மெஹ்ருன்னிசா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com