டாலர் கடத்தல் விவகாரம்: கேரள சபாநாயகருக்கு சுங்க இலாகா நோட்டீஸ்

டாலர் கடத்தல் விவகாரத்தில் கேரள முதல்வர் பினராயி விஜயன், சபாநாயகர் ஸ்ரீராமகிருஷ்ணன் ஆகியோருக்கு நெருக்கமான தொடரபு இருப்பதாக கூறப்படுகிறது.
படம்: ANI
படம்: ANI
Published on

திருவனந்தபுரம்

கேரள தங்கக் கடத்தல் விவகாரத்தில் கைது செய்யப்பட்டவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில் டாலர் கடத்தல் நடந்ததும் தெரிய வந்தது. இந்த சம்பவம் தொடர்பாகவும் தனியாக வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், சுங்கத்துறை அதிகாரிகள் கேரள ஐகோர்ட்டில் வாக்குமூலம் ஒன்றை அளித்தனர். அதில் சிறையில் உள்ள ஸ்வப்னா சுரேஷிடம் நடத்திய விசாரணையின்போது அமீரக கவுன்சிலர் ஜெனரலுடன் கேரள முதல்வர் பினராயி விஜயன், சபாநாயகர் ஸ்ரீராமகிருஷ்ணன் ஆகியோர் நெருக்கமான தொடர்பில் இருந்ததாகவும் கூறியுள்ளார்.

மேலும், இருவருக்கும் அரபி மொழி தெரியாது என்பதால் கவுன்சிலர் ஜெனரலுக்கும், 2 பேருக்கும் இடையே பேசுவதற்கு தன்னை பயன்படுத்தியதாகவும் தெரிவித்துள்ளார். இவர்களுடன் மேலும் மூன்று அமைச்சர்களுக்கு இந்த விவகாரத்தில் தொடர்பு இருந்ததாகவும் கூறியுள்ளார்.

கவுன்சிலர் ஜெனரலின் உதவியுடன் முதல்வரும் சபாநாயகரும் டாலர் கடத்தியதாகவும் ஸ்வப்னா தெரிவித்துள்ளார். ஸ்வப்னா சுரேஷின் வாக்குமூலத்தை அடிப்படையாக கொண்டு சுங்கத்துறை அதிகாரிகள் கேரள ஐகோர்ட்டில் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளனர்.

சுங்கத்துறை அதிகாரிகள் கேரள சட்டசபை சபாநாயகர் பி.ஸ்ரீராமகிருஷ்ணனுக்கு நோட்டீஸ் அனுப்பி, உள்ளனர். மார்ச் 12 ம் தேதி விசாரணைக் குழுவின் முன் ஆஜராகுமாறு உத்தரவிட்டடு உள்ளதாக அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கடத்தல் விவகாரம் தொடர்பாக அவரிடம் வாக்குமூலம் பெற பல முயற்சிகள் மேற்கொள்ளப்ட்டும் , அவர் வெளிநாட்டு பயணம் மற்றும் பிற வேலை காரணமாக முடியவில்லை என்று சுங்கத்துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com