கேரளா: பிரசவத்தின் போது பெண் டாக்டர் உயிரிழப்பு

பிரசவத்தின் போது பெண் டாக்டருக்கு உயர் ரத்த அழுத்தம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
கேரளா: பிரசவத்தின் போது பெண் டாக்டர் உயிரிழப்பு
Published on

திருவனந்தபுரம்,

கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டம் அரூர் அருகே சந்திரூர் பகுதியை சேர்ந்தவர் கபீர். இவருடைய மனைவி ஷீஜா. இவர்களது மகள் பாத்திமா. டாக்டரான இவர் திருச்சூரில் உள்ள கல்லூரியில் 3-ம் ஆண்டு எம்.டி. படித்து வந்தார். இவருடைய கணவர் கொல்லம் மாவட்டம் ஓச்சரா பகுதியை சேர்ந்த சனூஜ்.

இந்தநிலையில் பாத்திமா 2-வது பிரசவத்திற்காக எர்ணாகுளத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு, அங்கு சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு பிரசவம் நடந்த போது, திடீரென உயர் ரத்த அழுத்தம் ஏற்பட்டது. தொடர்ந்து அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால் பாத்திமாவுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர்.

இருப்பினும், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். ஆனால், பிறந்த குழந்தை நலமாக உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து எர்ணாகுளம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பிரசவத்தின் போது பெண் டாக்டர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com