கேரள வெள்ள நிவாரண நிதி: தெலுங்கானா அரசு ரூ.25 கோடி வழங்கியது

வெள்ளம், நிலச்சரிவால் பாதிக்கப்பட்டுள்ள கேரள மாநிலத்திற்கு வெள்ள நிவாரண நிதியாக ரூ.25 கோடி தெலுங்கானா அரசு சார்பில் வழங்கப்பட்டுள்ளது. #KeralaFloods
கேரள வெள்ள நிவாரண நிதி: தெலுங்கானா அரசு ரூ.25 கோடி வழங்கியது
Published on

திருவனந்தபுரம்,

100 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கேரள மாநிலம் கடுமையான வெள்ளத்தை சந்தித்துள்ளது. கேரள மாநிலத்திலுள்ள 80 அணைகளும் நிரம்பியதால் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. மழை, வெள்ளத்திற்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 324 ஆக உயர்ந்துள்ளது. 1,500க்கும் மேற்பட்ட நிவாரண முகாம்களில் 2, 23, 139 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். உங்கள் உதவி பாதிக்கப்பட்டவர்களின் வாழ்க்கையை மீண்டும் உருவாக்க முடியும் என அம்மாநில முதல்-மந்திரி பினராயி விஜயன் டுவிட்டரில் கோரிக்கை வைத்துள்ளார்.

இந்தநிலையில், வெள்ளம், நிலச்சரிவால் பாதிக்கப்பட்டுள்ள கேரள மாநிலத்துக்கு, தெலுங்கானா மாநில அரசு சார்பில் ரூ.25 கோடி நிதியுதவி அளிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, தமிழக அரசு சார்பில் ரூ. 5 கோடி நிவாரண நிதியாக வழங்கப்பட்டது. டெல்லி அரசு சார்பில் ரூ.10 கோடி நிதியுதவி வழங்கவதாக டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்தார். அவரைத் தொடர்ந்து பஞ்சாப் முதல்-மந்திரி அமரிந்தர் சிங் 10 கோடி ரூபாய் நிவாரணம் வழங்குதாக அறிவித்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com