கேரள வெள்ளம்: பலி எண்ணிக்கை 94 ஆக உயர்வு பிரதமர் சேதங்களை இன்று பார்வையிடுகிறார்

கேரள வெள்ளம் பலி எண்ணிக்கை 94 ஆக உயர்ந்து உள்ளது. வெள்ளப்பாதிப்புகளை பிரதமர் நரேந்திர மோடி இன்று பார்வையிடுகிறார். #Keralafloods2018 #PMModi
கேரள வெள்ளம்: பலி எண்ணிக்கை 94 ஆக உயர்வு பிரதமர் சேதங்களை இன்று பார்வையிடுகிறார்
Published on

புதுடெல்லி

கேரள மாநிலத்தில் வரலாறு காணாத அளவு பெய்துவரும் கன மழையால் இதுவரை 94 பேர் பலியாகியுள்ளனர். பாய்ந்தோடும் வெள்ளத்தில் சிக்கி 300-க்கும் அதிகமானோர் காணாமல் போயுள்ளனர். மீட்பு நடவடிக்கையை எதிர்பார்த்து ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் வெள்ளத்தில் சிக்கி தத்தளித்து வருகின்றனர். பாதிக்கப்பட்ட மக்களை மீட்கும் பணி துரிதமாக நடைபெற்று வருகிறது. 1,65,538 பேர் 1135 முகாம்களில் தஞ்சமடைந்துள்ளனர்.

2857 வீடுகள் சேதமடைந்து உள்ளது.3393 ஹெக்டேர் பயிர்கள் நாசமடைந்தன. இன்று பிரதமர் நரேந்திர மோடி இன்று மாலை கேரள செல்கிறார். அங்கு வெள்ள சேதங்களை பார்வையிடுகிறார்.

கேரள முதல்வர் பினராயி விஜயன் பேசும் போது பிரதமர் மோடி இன்று காலை என்னுடன் பேசினார்.

அப்போது இன்று வெள்ளிக்கிழமை "வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட பிரதமர் மோடி வருவதாக கூறி உள்ளார்.

"நாங்கள் வெள்ள நிவாரணப் பணிகள் பற்றி விவாதித்தோம், மீட்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசித்தோம் ," எனக் கூறினார்

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com