கேரள முதல்வர் நிவாரண நிதிக்கு ரூ.539 கோடி சேர்ந்தது

நேற்று இரவு வரை கேரள முதல்வர் பிரனராயி விஜயன் நிவாரண நிதிக்கு ரூ.539 கோடி சேர்ந்து உள்ளது. #Keralafloods2018
கேரள முதல்வர் நிவாரண நிதிக்கு ரூ.539 கோடி சேர்ந்தது
Published on

திருவனந்தபுரம்

கன மழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் உருக்குலைந்து போன கேரள மாநிலம் மெதுவாக தனது இயல்பு திரும்பி வருகிறது. கேரளாவை சீரமைப்பதற்கு நாடு முழுவதும் இருந்து பல்வேறு தரப்பினரும் நிதி உதவி அளித்து வருகின்றனர்.கேரள முதல் அமைச்சர் நிவாரணை நிதிக்கு பலவேறு தரப்பினர் நிவாரன நிதி அனுப்பி வருகின்றனர்.

நாடுமுழுவதும் உள்ள நிவாரண முகாம்களில் தங்க வைக்கபட்டு இருந்த 10 லட்சத்திற்கும் அதிகமான பேர் மீண்டும் தங்கள் வீடுகளுக்கு திரும்பி வருகின்றனர். கடந்த சில நாட்களில் 5 லடசம் பேர் தங்கள் வீடுகளுக்கு திரும்பி உள்ளனர்.

நேற்று இரவு வரை முதல்வர் நிவாரண நிதியில் ரூ.539 கோடி ரூபாய் சேர்ந்து உள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com