முறையான முன்னெச்சரிக்கை திட்டங்களை உருவாக்காததே கேரளாவில் ஏற்பட்டுள்ள பேரழிவிற்கு காரணம்: சுப்ரமணியசாமி

கேரளாவில் முறையான முன்னெச்சரிக்கை திட்டங்களை உருவாக்காததே கேரளாவில் ஏற்பட்டுள்ள பேரழிவிற்கு காரணம் என பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியசாமி கூறியுள்ளார். #Keralafloods #Subramaniasamy
முறையான முன்னெச்சரிக்கை திட்டங்களை உருவாக்காததே கேரளாவில் ஏற்பட்டுள்ள பேரழிவிற்கு காரணம்: சுப்ரமணியசாமி
Published on

புதுடெல்லி,

கேரள மாநிலத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளம் குறித்து பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியசாமி ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்திற்கு அளித்துள்ள பேட்டியில் கூறியதாவது, பினராயி விஜயன் தலைமையிலான அரசாங்கம் முறையான முன்னெச்சரிக்கை திட்டங்களை உருவாக்காததே பேரழிவிற்கு காரணம். இப்பேரழிவு மனிதன் உருவாக்கிய தான்.

முந்தைய ஆட்சிகாலத்தில் காங்கிரஸ் அரசு பணத்தை சுருட்டுவதில் தான் ஆர்வம் காட்டியது. அதே போல தற்போதுள்ள அரசாங்கமும் வெறும் சொல்லாட்சியே செய்து வருகிறது. ஒரு போர் ஏற்பட்டலோ அல்லது ஒரு நிலநடுக்கம் நிகழ்ந்தாலோ அதிலிருந்து மீள்வதற்கு தகுந்த முன்னெச்சரிக்கை திட்டம் இல்லாமல் நம்மால் ஒருங்கமைக்கப்பட்ட சமுதாயத்தை உருவாக்க இயலாது. நம் சமூகம் எவ்வளவு வலிமையானது என்பது பேரழிவுக்கு பிறகு நாடு மீள்வதிலிருந்து காட்டும்.

மாநில அரசின் மோசமான உள்கட்டமைப்பின் காரணமாக கேரளா உருக்குலைந்துள்ளது. எல்லாம் உடைந்து விட்டது. பாலங்கள் இடிந்து விட்டன. கேரளாவில் நிகழ்ந்துள்ள இவ்வளவு பெரிய மோசமான பேரழிவை இதுவரை நான் உலகில் கண்டதில்லை. இதற்கு முந்தைய காலங்களில் உலகின் பல பகுதியில் ஏற்பட்ட வெள்ளபெருக்கின் போதும் இது போன்ற ஒன்றுக்கு உதவாத அரசாங்கத்தை நான் பார்த்ததில்லை எனக் கூறினார்.

இந்நிலையில் கேரளாவில் ஏற்பட்டுள்ள பேரழிவிற்கு இதுவரை 357 பேர் பலியாகியுள்ளனர். மேலும் மாநிலத்தில் பெய்த கனமழையினால் இதுவரை ரூ.19,512 கோடி அளவிற்கு பொருட்சேதங்கள் ஏற்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com