

திருவனந்தபுரம்,
கேரளாவில் தங்கம் மற்றும் டாலர் கடத்தல் வழக்குகளை விசாரித்துவரும் அமலாக்க இயக்ககம் உள்ளிட்ட தேசிய விசாரணை அமைப்புகளுக்கு எதிராக நீதி விசாரணைக்குப் பரிந்துரைக்க கேரள அரசு முடிவு செய்துள்ளது.
திருவனந்தபுரத்தில் நேற்று நடைபெற்ற சிறப்பு மந்திரிசபை கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.
இதுதொடர்பாக கேரள அரசு வட்டாரங்கள் கூறுகையில், தங்கம் மற்றும் டாலர் கடத்தல் வழக்கு விசாரணையை தடம்புரளச் செய்யும் மத்திய விசாரணை அமைப்புகளுக்கு எதிராக ஒரு நீதி விசாரணைக்குப் பரிந்துரைக்க மாநில மந்திரிசபை முடிவெடுத்துள்ளது.
தற்போது, தேர்தல் தொடர்பான மாதிரி நடத்தை விதி அமலில் உள்ளதால், இதுதொடர்பாக தேர்தல் ஆணையத்தின் அனுமதி பெற்றபின் சம்பந்தப்பட்ட ஆணையம் நியமிக்கப்படும் என்று தெரிவித்தன.