முதல்-மந்திரி பினராயி விஜயன் குறித்த ரகசிய வாக்குமூலத்தை வாபஸ் பெற மாட்டேன் சுவப்னா சுரேஷ்

கேரளாவில் தங்கம் கடத்தல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சுவப்னா சுரேஷ் 164 சட்ட பிரிவின்கீழ் எர்ணாகுளம் கோர்ட்டில் ரகசிய வாக்குமூலம் அளித்தார்.
முதல்-மந்திரி பினராயி விஜயன் குறித்த ரகசிய வாக்குமூலத்தை வாபஸ் பெற மாட்டேன் சுவப்னா சுரேஷ்
Published on

திருவனந்தபுரம்,

கேரளாவில் தங்கம் கடத்தல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சுவப்னா சுரேஷ் 164 சட்ட பிரிவின்கீழ் எர்ணாகுளம் கோர்ட்டில் ரகசிய வாக்குமூலம் அளித்தார்.

அதில் முதல்-மந்திரி பினராயி விஜயன், அவரது மனைவி, மகள் ஆகியோருக்கு தங்கம், டாலர் நோட்டுகள் கடத்தப்பட்ட சம்பவத்தில் தொடர்பு உண்டு என அதிரடி தகவலை தெரிவித்து இருந்தார். அந்த வாக்குமூலம் குறித்து பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது.

அதில், 'பெங்களூருவில் தகவல் தொழில் நுட்ப நிறுவனம் நடத்தி வரும் தனது மகள் வீணா விஜயனின் நிறுவன வளர்ச்சிக்காக பினராயி விஜயன், சார்ஜாவின் தகவல் தொழில் நுட்ப மந்திரியின் உதவியை நாடியதுடன் மட்டுமின்றி அவருடன் பேச்சுவார்த்தையும் நடத்தினார். ஆனால் சவுதி மன்னர் குடும்பத்தினரின் எதிர்ப்பை தொடர்ந்து அது தொடர்பான எந்த உதவியும் கிடைக்கவில்லை.

இந்த நிலையில் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக தொடர்ந்து கூறிவரும் சுவப்னா சுரேஷ் பாலக்காட்டில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அதில், 'முதல்-மந்திரி பினராயி விஜயன் உள்பட பலரிடம் இருந்து எனக்கு மிரட்டல்கள் வருகிறது.

ஆனாலும் எந்த காரணம் கொண்டும் முதல்-மந்திரி பினராயி விஜயன் அவரது மனைவி, மகளுக்கு எதிரான ரகசிய வாக்குமூலத்தை வாபஸ் பெறப்போவதில்லை' என கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com