வேந்தர் பதவியில் இருந்து கவர்னரை நீக்கும் அவசர சட்டம்: ராஜ்பவனுக்கு அனுப்பி வைத்தது கேரள அரசு

கேரளாவில் அரசுக்கும், கவர்னர் ஆரிப் முகமது கானுக்கும் இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது.
வேந்தர் பதவியில் இருந்து கவர்னரை நீக்கும் அவசர சட்டம்: ராஜ்பவனுக்கு அனுப்பி வைத்தது கேரள அரசு
Published on

திருவனந்தபுரம்,

கேரளாவில் அரசுக்கும், கவர்னர் ஆரிப் முகமது கானுக்கும் இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது.பல்கலைக்கழக துணைவேந்தர், பேராசிரியர் பதவிகளில் அரசு நியமிப்பவர்களுக்கு கவர்னர் கடும் எதிர்ப்பு தெரிவித்ததுதான் இதற்கு காரணம். இதையடுத்து, துணைவேந்தர் நியமனங்களில் ஆளுநரின் அதிகாரத்தை குறைக்கும் மசோதா, இரு மாதங்களுக்கு முன் கேரள சட்டசபையில் கொண்டு வரப்பட்டது.

ஆனால், அந்த மசோதாவில் இதுவரை கவர்னர் ஆரிப் கையெழுத்து போடவில்லை. இதையடுத்து ஆளுநரை பல்கலைக் கழக வேந்தர் பதவியிலிருந்து நீக்க அவசர சட்டம் கொண்டு வர கேரள அரசு தீர்மானித்தது. இதுதொடர்பாக முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது. அதன்படி அவசர சட்டம் தயாரிக்கப்பட்டு, கவர்னரின் ஒப்புதலுக்காக இன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com