வெளிநாடு செல்பவர்களுக்கு 2-வது தடுப்பூசி போட முன்னுரிமை - கேரள சுகாதாரத்துறை மந்திரி வீணா ஜார்ஜ் தகவல்

வெளிநாடு செல்பவர்களுக்கு 2-வது தடுப்பூசி போட முன்னுரிமை அளிக்கப்படும் என கேரள சுகாதாரத்துறை மந்திரி வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.
வெளிநாடு செல்பவர்களுக்கு 2-வது தடுப்பூசி போட முன்னுரிமை - கேரள சுகாதாரத்துறை மந்திரி வீணா ஜார்ஜ் தகவல்
Published on

திருவனந்தபுரம்,

கொரோனா தொற்றின் 2வது அலை பரவலுக்கு மத்தியில், தடுப்பூசி போடும் பணி நாடு முழுவதும் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதிலும் குறிப்பாக வெளிநாடு செல்பவர்கள் அதிக அளவில் தடுப்பூசி செலுத்த ஆர்வம் காட்டி வருகின்றனர்.

அந்த வகையில் வெளிநாடு செல்பவர்களுக்கு தடுப்பூசி 2வது டோஸ் போடுவதில் முன்னுரிமை வழங்குவது குறித்து கேரள சுகாதாரத்துறை மந்திரி வீணா ஜார்ஜ் திருவனந்தபுரத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, அவர் கூறியதாவது;-

பல வெளிநாடுகளில் தடுப்பூசி எடுத்து கொண்டதற்கான சான்றிதழ் கட்டாயம் என அறிவித்து உள்ளது. மேலும், சான்றிதழ்களில் பாஸ்போர்ட் எண் அச்சிடப்பட வேண்டும் என வலியுறுத்தி இருக்கிறார்கள். இதை கருத்தில் கொண்டு வெளிநாடுகளுக்கு செல்வோருக்கு முன்னதாகவே அதாவது 4-வது, 6-வது வாரத்தில் 2-வது தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. அவர்களுக்கு சிறப்பு தடுப்பூசி சான்றிதழ் வழங்கப்படும்.

கேரளாவில் நேற்று 22,318 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 26,270 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். ஒரே நாளில் 194 கொரோனா நோயாளிகள் மரணம் அடைந்து உள்ளனர். இதனால், கேரளாவில் பலியானோர் எண்ணிக்கை 8,257 ஆக உயர்ந்து உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com