கேரளாவில் கிறிஸ்துமஸ்-புத்தாண்டு பம்பர் லாட்டரி அறிமுகம்; முதல் பரிசு ரூ.25 கோடி

கேரளாவில் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகையையொட்டி ரூ.25 கோடி முதல் பரிசு கொண்ட பம்பர் லாட்டரியை முதல் மந்திரி வி.டி. சதீசன் இன்று அறிமுகம் செய்தார்.
புத்தாண்டு பம்பர் லாட்டரி
Published on: 

கேரள மாநில லாட்டரித்துறை சார்பில் ஆண்டுதோறும் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகையையொட்டி சிறப்பு பம்பர் லாட்டரி நடத்தப்படுகிறது. அந்த வகையில், நடப்பு ஆண்டுக்கான கிறிஸ்துமஸ்-புத்தாண்டு பம்பர் லாட்டரியை திருவனந்தபுரத்தில் வி.டி. சதீசன் தொடங்கி வைத்தார்.இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், கேரள மாநில லாட்டரித்துறையின் கிறிஸ்துமஸ்-புத்தாண்டு பம்பர் லாட்டரியை தொடங்கி வைப்பதில் மகிழ்ச்சி அடைவதாக தெரிவித்துள்ளார்.

முதல் பரிசு

இந்த லாட்டரியில் முதல் பரிசாக ரூ.25 கோடி அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மொத்தம் 7,66,992 பரிசுகள் வழங்கப்பட உள்ளன. முதல் பரிசு: ரூ.25 கோடி வழங்கப்படுகிறது. இரண்டவது பரிசு ரூ.1 கோடி வழங்கப்படுகிறது. இதுதவிர, ரூ.500 முதல் ரூ.5,000 வரை பல்வேறு தொகைகளில் பரிசுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.

குலுக்கல் எப்போது?

இந்த பம்பர் லாட்டரி டிக்கெட்டின் விலை ரூ.450 ஆகும். வரும் நவம்பர் 28-ம் தேதி முதல் டிக்கெட் விற்பனை தொடங்குகிறது. இதற்கான குலுக்கல் அடுத்த ஆண்டு பிப்ரவரி 1-ம் தேதி நடைபெற உள்ளது.

X