

புதுடெல்லி,
டெல்லியில் நிதி ஆயோக் அமைப்பின் தலைமை செயல் அதிகாரி அமிதாப் கந்த் இந்த அறிக்கையை நேற்று வெளியிட்டார்.
இதன்படி, பெரிய மாநிலங்களில் உடல் ஆரோக்கியத்தில் முதல் இடத்தை கேரள மாநிலம் பெற்று உள்ளது. இரண்டாவது இடத்தை பஞ்சாப் மாநிலம் பிடித்தது.
மூன்றாவது இடம் தமிழ்நாட்டுக்கு கிடைத்து உள்ளது.
சுகாதார குறியீட்டில் மிக மோசமான நிலையில் உள்ள மாநிலங்களாக உத்தரபிரதேசம், ராஜஸ்தான், பீகார், ஒடிசா உள்ளன.
சுகாதாரத்தை பொறுத்தமட்டில், வருடாந்திர அதிகரிப்பு செயல்திறனில் ஜார்கண்ட், காஷ்மீர், உத்தரபிரதேச மாநிலங்கள் முன்னிலை பெற்று உள்ளன.
சிறிய மாநிலங்களில் உடல் ஆரோக்கியத்தில் மிசோரம் முதல் இடம் பெறுகிறது. இரண்டாவது இடம் மணிப்பூருக்கும், மூன்றாம் இடம் கோவாவுக்கும் செல்கிறது.