கேரளாவில் மேலும் 50 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு..!

கேரளாவில் இதுவரை ஒமைக்ரானால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 280 ஆக உயர்ந்துள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

திருவனந்தபுரம்,

கொரோனாவின் உருமாறிய தொற்றான ஒமைக்ரான் வைரஸ் பரவல் கேரளாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் கேரளாவில் இன்று மேலும் 50 பேருக்கு ஒமைக்ரான் வகை கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், கேரளாவில் மேலும் 50 பேருக்கு ஒமைக்ரான் வகை தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒமைக்ரானால் பாதிக்கப்பட்ட 50 நபர்களில் 18 பேர் எர்ணாகுளத்திலும், 8 பேர் திருவனந்தபுரத்திலும், 7 பேர் பத்தனம்திட்டாவிலும், தலா 5 பேர் கோட்டயம் மற்றும் மலப்புரத்திலும், 3 பேர் கொல்லத்தில் இருந்தும், ஆலப்புழா, திருச்சூர், பாலக்காட்டைச் சேர்ந்த தலா ஒருவரும் இதில் அடங்குவர்.

இதில் 45 பேர் குறைந்த அபாயப் பட்டியலிலுள்ள நாடுகளிலிருந்து வந்தவர்கள். 5 பேர் அதிக அபாயப் பட்டியலிலுள்ள நாடுகளிலிருந்து வந்தவர்கள். தொடர்பிலிருந்தவர்கள் மூலம் எவருக்கும் ஒமைக்ரான் தொற்று இருப்பது உறுதி செய்யப்படவில்லை.

இதன்மூலம் கேரளாவில் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 280 ஆக உயர்ந்துள்ளது. அவர்களில் 186 பேர் குறைந்த ஆபத்துள்ள நாடுகளில் இருந்தும், 64 பேர் அதிக ஆபத்துள்ள நாடுகளில் இருந்தும் வந்தவர்கள். மேலும் 30 பேர் தொடர்பு மூலம் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று அதில் மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com