கேரளாவில் மேலும் 76- பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு

கேரளாவில் மேலும் 76 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
கேரளாவில் மேலும் 76- பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு
Published on

திருவனந்தபுரம்,

கொரோனா வைரஸ் பல்வேறு வகைகளில் உருமாறி டெல்டா, டெல்டா பிளஸ் என வகைகளில் பரவி வந்தது. தற்போது கொரோனா மேலும் உருமாறி ஒமைக்ரான் என்ற பெயரில் உலகை அச்சுறுத்தி வருகிறது.

தென் ஆப்பிரிக்காவில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இந்த ஒமைக்ரான் கண்டறியப்பட்டது. தற்போது, இந்தியாவிலும் இந்த ஒமைக்ரான் வைரஸ் வேகமாக பரவத்தொடங்கியுள்ளது. இன்று காலை நிலவரப்படி இந்தியாவில் இதுவரை ஒமைக்ரான் பாதித்தவர்கள் எண்ணிக்கை 4,868- ஆக உள்ளது.

இந்த நிலையில், கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 76 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. அம்மாநிலத்தில் இதுவரை ஒமைக்ரான் பாதித்தவர்கள் எண்ணிக்கை 421- ஆக உயர்ந்துள்ளது.

பத்தினம் திட்டாவில் உள்ள தனியார் நர்சிங் கல்லூரியில் இருந்து பலருக்கு ஒமைக்ரான் பரவியிருப்பதாக கேரள சுகாதாரத்துறை மந்திரி தெரிவித்துள்ளார். நர்சிங் கல்லூரியி படிக்கும் மாணவர் ஒருவர், வெளிநாட்டில் இருந்து வந்தவருடன் தொடர்பில் இருந்துள்ளார். அவர் மூலமாக கல்லூரியில் கிளஸ்டர் ஏற்பட்டு இருப்பதாக வீனா ஜார்ஜ் கூறினார்.

திங்கள் கிழமை ஒமைக்ரான் கண்டறியப்பட்ட 76 பேரில் 15 பேர் திரிசூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் ஆவர். 13 பேர் பத்தினம் திட்டா, 8 பேர் ஆலப்புழா, 8 பேர் கன்னூர், 6 பேர் திருவனந்தபுரம், 6 பேர் கோட்டயம், 6 பேர் கொல்லம் ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்கள் எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com