காவிரி வழக்கு இறுதி தீர்ப்பில் விளக்கம் கோரி உச்சநீதிமன்றத்தில் கேரள அரசு மனு

காவிரி வழக்கு இறுதி தீர்ப்பில் விளக்கம் கோரி உச்சநீதிமன்றத்தில் கேரள அரசு மனு தாக்கல் செய்துள்ளது. #SupremeCourt #CauveryManagementBoard
காவிரி வழக்கு இறுதி தீர்ப்பில் விளக்கம் கோரி உச்சநீதிமன்றத்தில் கேரள அரசு மனு
Published on

புதுடெல்லி,

காவிரி நடுவர் மன்ற தீர்ப்பை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க மத்திய அரசுக்கு 6 வார காலம் அவகாசம் அளித்து கடந்த மாதம் 16-ந் தேதி தீர்ப்பு கூறியது.

இதைத்தொடர்ந்து, தமிழக அரசும், அரசியல் கட்சிகளும் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் என்று மத்திய அரசை வற்புறுத்தி வருகின்றன. சுப்ரீம் கோர்ட்டு விதித்த காலக்கெடுவில் 5 வாரங்கள் முடிந்துவிட்டன. ஆனால், மத்திய அரசு இன்னும் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காமல் காலம்தாழ்த்தி வருகிறது.

இந்த நிலையில், காவிரி வழக்கு இறுதி தீர்ப்பில் விளக்கம் கோரி உச்சநீதிமன்றத்தில் கேரள அரசு மனு தாக்கல் செய்துள்ளது. பிப்ரவரி-16 ஆம் தேதி வழங்கிய தீர்ப்பை மறுஆய்வு செய்ய வேண்டும் என்றும், காவிரி நடுவர் மன்றம் ஒதுக்கிய 30 டி.எம்.சி தண்ணீரை பயன்படுத்திக்கொள்ள அனுமதிக்க வேண்டும் என்றும் கேரள அரசு தனது மனுவில் தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com