கேரள ஓணம் லாட்டரி: பெயிண்ட் கடை தொழிலாளிக்கு ரூ.25 கோடி அடித்த யோகம்

ஆலப்புழா மாவட்டத்தை சேர்ந்த சரத் நாயர் என்பவருக்கு ஓணம் லாட்டரியில் ரூ.25 கோடி பரிசு அடித்திருக்கிறது.
கேரள ஓணம் லாட்டரி: பெயிண்ட் கடை தொழிலாளிக்கு ரூ.25 கோடி அடித்த யோகம்
Published on

ஆலப்புழா,

கேரளாவில் ஓணம் பண்டிகை பம்பர் சிறப்பு குலுக்கல் நடந்தது. இதற்கான டிக்கெட்டுகள் விற்பனை ஒரு மாதத்திற்கும் மேலாக நடைபெற்றது. ஒரு டிக்கெட் ரூ.500-க்கு விற்கப்பட்டது. முதல் பரிசு ஒரு நபருக்கு ரூ25 கேடி, இரண்டாம் பரிசாக 20 பேருக்கு தலா ரூ1.கோடி, மூன்றாம் பரிசாக 20 பேருக்கு தலா ரூ.50 லட்சம் என அறிவிக்கப்பட்டிருந்தது.

மேலும் பலருக்கு ரூ5 லட்சம், ரூ2 லட்சம் மற்றும் பல தொகைகள் பரிசாக அறிவிக்கப்பட்டது. பம்பர் பரிசு கோடிகள் மற்றும் லட்சங்களாக இருந்ததால் லாட்டரி சீட்டுகளை பலர் போட்டிபோட்டு வாங்கினர். இதனால் ஓணம் பண்டிகை பம்பர் குலுக்கல் லாட்டரி சீட்டுகள் 70 லட்சத்துக்கும் மேல் விற்பனையாகின. இந்தநிலையில் ஓணம் பண்டிகை பம்பர் சிறப்பு குலுக்கல் கடந்த 4-ந்தேதி நடைபெற்றது. இதில் TH577825 என்ற எண்ணிற்கு முதல் பரிசு அடித்துள்ளது. ஆலப்புழா மாவட்டத்தை சேர்ந்த சரத் நாயர் என்பவருக்குதான் ஓணம் லாட்டரியில் ரூ.25 கோடி பரிசு அடித்திருப்பது தெரியவந்தது. பரிசுத்தொகை அடித்த சரத் நாயர், நிப்பான் பெயிண்ட் கடையில் வேலை பார்த்து வருகிறார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com