கேரள விமான விபத்து; தப்பி பிழைத்த 3 வயது குழந்தை

கேரள விமான விபத்தில் தப்பி பிழைத்த 3 வயது குழந்தையை போலீசார் மீட்டுள்ளனர்.
கேரள விமான விபத்து; தப்பி பிழைத்த 3 வயது குழந்தை
Published on

கோழிக்கோடு,

வந்தே பாரத் திட்டத்தின் கீழ் துபாயில் இருந்து இந்தியா வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் நேற்றிரவு 7.40 மணிக்கு கோழிக்கோடு கரிப்பூர் சர்வதேச விமான நிலையத்தில் விபத்தில் சிக்கியது. இதில் விமானம் இரண்டாக உடைந்தது.

இந்த விபத்தில் 2 விமானிகள் உள்பட 19 பேர் உயிரிழந்தனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். அவர்கள் கோழிக்கோடு மற்றும் மலப்புரம் நகர மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுகின்றனர்.

விமான விபத்து நடந்த பின்னர் போலீசார், தீயணைப்பு வீரர்கள், விமான நிலைய உயரதிகாரிகள் உள்ளிட்டோர் சம்பவ பகுதிக்கு உடனடியாக சென்றனர். அவர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டனர். இதேபோன்று அவர்களுக்கு உதவியாக காயமடைந்த பயணிகளுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்க மருத்தவர்களும் சென்றிருந்தனர்.

சில பயணிகள் இருக்கைகளுக்கு இடையில் சிக்கி இருந்தனர். தீயணைப்பு வீரர்கள் அவர்களை வெளியே கொண்டு வர உதவி செய்தனர். விமானத்தில் 10க்கும் மேற்பட்ட குழந்தைகள் இருந்துள்ளனர். இந்த விபத்தில் தப்பி பிழைத்த 3 வயது குழந்தையை போலீசார் மீட்டுள்ளனர். விமான விபத்து நடந்த அதிர்ச்சியில் இருந்து அந்த குழந்தை இன்னும் மீளவில்லை. பின்னர் குழந்தையை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com