கொச்சி மெட்ரோ ரயில் சேவை: பிரதமர் நரேந்திர மோடி துவங்கி வைத்தார்

கொச்சி மெட்ரோ ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி கொடியசைத்து துவக்கி வைத்தார்.
கொச்சி மெட்ரோ ரயில் சேவை: பிரதமர் நரேந்திர மோடி துவங்கி வைத்தார்
Published on

கொச்சி,

கேரளாவின் கெச்சி நகரில் முதல்கட்டமாக 25 கி.மீ. தூரத்துக்கு மெட்ரே ரயில் சேவைக்கான பாதைகள் அமைக்கப்பட்டு வருகிறது. அதில் பலரிவட்டம் மற்றும் அலுவா இடையே 13 கி.மீ தூரத்துக்கான பாதை அமைக்கும் பணிகள் முடிவடைந்து, மெட்ரே ரயிலின் வெள்ளேட்டமும் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டது.இதைத் தெடர்ந்து முதல் முறையாக கேரளாவில் மெட்ரே ரயில் சேவை இன்று முதல் துவங்கப்படுகிறது.

இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி காலை 10.15 மணியளவில் கொச்சியில் உள்ள ஐ.என்.எஸ் கருடா விமான தளத்தில் உள்ள விமான நிலையம் வந்தார்.

கொச்சி வந்த பிரதமரை கேரள முதல் மந்திரி பினராயி விஜயன் உள்ளிட்டோர் வரவேற்றனர். பின்னர், மெட்ரோ ரயில் நிலையத்தை திறந்து வைத்த பிரதமர் மோடி, மெட்ரோ ரயில் சேவையை கொடி அசைத்து துவக்கி வைத்தார். பின்னர் மெட்ரோ ரயிலில் பயணமும் மேற்கொண்டார். பிரதமர் மோடியுடன் கேரள முதல் மந்திரி பினராயி விஜயன், மத்திய மந்திரி வெங்கையா நாயுடு உள்ளிட்டோர் பயணம் மேற்கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com