தூங்கிய நபரின் கழுத்தை நெரித்த மலைப்பாம்பு.. பரபரப்பு வீடியோ


தூங்கிய நபரின் கழுத்தை நெரித்த மலைப்பாம்பு..  பரபரப்பு வீடியோ
x
தினத்தந்தி 22 July 2024 9:48 AM IST (Updated: 22 July 2024 10:39 AM IST)
t-max-icont-min-icon

தொழிலாளியை மலைப்பாம்பு சுற்றி வளைத்து கழுத்தை நெரிக்கும் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

திருவனந்தபுரம்.

கேரளாவில் தூங்கிக்கொண்டிருந்த தொழிலாளியை மலைப்பாம்பு சுற்றி வளைத்து கழுத்தை நெரிக்கும் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. கேரளாவின் எந்த பகுதியில் இந்த வீடியோ எடுக்கப்பட்டது என்பது குறித்த விபரம் வெளியாகவில்லை.

தொழிலாளியை மலைப்பாம்பு சுற்றிக்கொண்டிருக்கும் நிலையில், பாம்பிடம் இருந்து அவரை விடுவிக்க சிலர் முயற்சி செய்கின்றனர். கடின முயற்சிக்கு பிறகு இருவர் பாம்பிடம் இருந்து தொழிலாளியை மீட்டனர். பின்னர் அந்த பாம்பை பிளாஸ்டிக் பைக்குள் போட்டு எடுத்துச்செல்கின்றனர். தற்போது இதன் வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

1 More update

Next Story