கேரளாவில் மேலும் 1,195 பேருக்கு கொரோனா பாதிப்பு

கேரளாவில் இன்று மேலும் 1,195 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
கேரளாவில் மேலும் 1,195 பேருக்கு கொரோனா பாதிப்பு
Published on

திருவனந்தபுரம்,

இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கையில் மராட்டியம் முதல் இடமும், தமிழகம், ஆந்திரா, கர்நாடகா மற்றும் டெல்லி ஆகியவை அடுத்தடுத்த இடங்களிலும் உள்ளன. தற்போது கேரளாவிலும் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் கேரளாவில் இன்று மேலும் 1,195 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதன்மூலம் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 29 ஆயிரத்து 151 ஆக உயர்ந்து உள்ளது.

வைரஸ் உறுதி செய்யப்பட்டவர்களில் 971 பேர் தொடர்புகள் மூலமாகவும், 66 பேர் வெளி நாடுகளில் இருந்து வந்தவர்களும், 125 பேர் வெளி மாநிலங்களில் இருந்து கேரளா வந்தவர்களும். எஞ்சியோர் உள்மாநிலத்தை சேர்ந்தவர்களும் ஆவர்.

மேலும் 1,234 இன்று பேர் ஒரே நாளில் குணமடைந்துள்ளனர். இதனால் மாநிலத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 17 ஆயிரத்து 533 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட 11,494 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

வைரஸ் தாக்குதலுக்கு இன்று 7 பேர் உயிரிழந்தநிலையில், கொரோனா தாக்குதலுக்கு உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 94 ஆக அதிகரித்துள்ளது. இதனை அம்மாநில முதல்-மந்திரி பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com