

திருவனந்தபுரம்,
நாட்டிலேயே கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாநிலமாக தற்போது கேரளா உள்ளது. அம்மாநிலத்தில் நேற்று புதிதாக 3,677 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 10 லட்சத்து 45 ஆயிரத்து 358 ஆக உயர்ந்துள்ளது.
அதேபோல், நேற்று ஒரே நாளில் 4,652 பேர் தொற்றில் இருந்து குணம் அடைந்துள்ளனர். இதன்மூலம் அம்மாநிலத்தில் இதுவரை கொரோனாவில் இருந்து குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 9 லட்சத்து 92 ஆயிரத்து 372 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா பாதிப்பால் நேற்று 14 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் இதுவரை உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4,136 ஆக உயர்ந்துள்ளது. தற்போது கொரோனா பாதிப்பால் 51,879 பேர் சிகிச்சையில் உள்ளனர் என்று அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.