கேரளாவில் மேலும் 5,848 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

கேரளாவில் இன்று 5,848 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கேரளாவில் மேலும் 5,848 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
Published on

திருவனந்தபுரம்,

கேரள மாநிலத்தில் கொரோனாவின் தீவிரம் பெரிதும் குறையாமல் தொடரும் சூழலில்கேரளாவில் இன்றைய கொரோனா பாதிப்பு தொடர்பான விவரத்தை அம்மாநில சுகாதாரத்துறை வெளியிட்டது. அதன்படி, கடந்த 24 மணிநேரத்தில் 63,463 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. கேரளாவில் இன்று 5,848 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 67,185 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா பாதிப்பில் இருந்து இன்று மேலும் 7,228 பேர் குணமடைந்துள்ளனர். இதனால், கேரளாவில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 49,57,509 ஆக அதிகரித்துள்ளது.

ஆனாலும், வைரஸ் தாக்குதலுக்கு இன்று 46 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், கேரளாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 35,750 ஆக அதிகரித்துள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com