

திருவனந்தபுரம்,
கேரளாவில் இன்று புதிதாக 1,989 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 11,11,898 ஆக உயர்ந்துள்ளது.
அதேபோல், இன்று ஒரே நாளில் 1,865 பேர் தொற்றில் இருந்து குணம் அடைந்துள்ளனர். இதன்மூலம் அம்மாநிலத்தில் இதுவரை கொரோனாவில் இருந்து குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 10 லட்சத்து 82 ஆயிரத்து 668 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா பாதிப்பால் கடந்த 24 மணி நேரத்தில் 12 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை உயிரிழந்தவர்கள் மொத்த எண்ணிக்கை 4,529 ஆக உயர்ந்துள்ளது. தற்போது கொரோனா பாதிப்பால் 24,380 பேர் சிகிச்சையில் உள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 51,207 பேருக்கு கொரோனா மாதிரிகள் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளன என்று அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.