கேரளாவில் கொரோனா பாதிப்பால் 33 பேர் பலி: இன்று புதிதாக 5,218 பேருக்கு தொற்று உறுதி

கேரளாவில் இன்று புதிதாக 5,218 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது.
கேரளாவில் கொரோனா பாதிப்பால் 33 பேர் பலி: இன்று புதிதாக 5,218 பேருக்கு தொற்று உறுதி
Published on

திருவனந்தபுரம்,

கேரளாவில் கடந்த சில வாரங்களாக கொரோனா பாதிப்பு தொடர்ந்து நீடித்து வருகிறது. கேரள சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று வெளியிட்ட தகவலின் படி, அம்மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 5 ஆயிரத்து 218 பேருக்கு கொரோனாதொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மாநிலத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்படுவோர் விகிதம் 9.24 சதவிகிதமாக உள்ளது.

கொரோனா பாதிப்பால் இன்று ஒரே நாளில் 33 பேர் பலியாகியுள்ளனர். கேரளாவில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 2,680 ஆக உள்ளது. தொற்று பாதிப்புடன் 57 ஆயிரத்து 757 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா பாதிப்பில் இருந்து இன்று மேலும் 5,066 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதன்மூலம் இதுவரை கொரோனா பாதிப்பில் இருந்து மொத்தம் 6 லட்சத்து 16 ஆயிரத்து 666 பேர் குணம் அடைந்துள்ளனர்

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com