கேரளாவில் கொரோனா பாதிப்பு: இன்று மேலும் 5,375 பேருக்கு தொற்று உறுதி

கேரளாவில் இன்று மேலும் 5,375 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
கேரளாவில் கொரோனா பாதிப்பு: இன்று மேலும் 5,375 பேருக்கு தொற்று உறுதி
Published on

திருவனந்தபுரம்,

கேரள மாநில சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, கேரளாவில் இன்று புதிதாக 5,375 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் கேரளாவில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 6,08,358 ஆக அதிகரித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் கேரளாவில் 26 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழப்பு மொத்த எண்ணிக்கை 2,270 ஆக உயர்ந்துள்ளது. இன்று 6,151 பேர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர். தற்போது மாநிலம் முழுவதும் 61,092 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வரும் நிலையில், இதுவரை மொத்தம் 5,44,864 பேர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்துள்ளதாக கேரள மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com