

திருவனந்தபுரம்,
கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 5,404 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 50,20,909 ஆக உயர்ந்துள்ளது. தொற்று பாதிப்பால் ஒரே நாளில் 80 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் இதுவரை கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 33,978 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனாவில் இருந்து மேலும் 6,136 பேர் குணம் அடைந்துள்ளனர். இதன்மூலம் இதுவரை கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 49,14,993 ஆக அதிகரித்துள்ளது.
தொற்று பாதிப்புடன் சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 71,316 ஆக குறைந்துள்ளது. கொரோனா தொற்று பாதிப்பைக் கண்டறிய அம்மாநிலத்தில் இன்று 52,862 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. மாநிலத்தில் அதிகபட்சமாக திருவனந்தபுரம் மாவட்டத்தில் 777 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.