கேரளாவில் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு ரத்து..!!

கேரளாவில் பள்ளிகள், கல்லூரிகள் மீண்டும் திறக்கப்படும் என்றும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு ரத்து செய்யப்படுவதாகவும் பினராயி விஜயன் அறிவித்துள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

திருவனந்தபுரம்,

திருவனந்தபுரத்தில் நேற்று கொரோனா கட்டுப்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம் முதல்-மந்திரி பினராயி விஜயன் தலைமையில் நடந்தது.

பின்னர் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் குறித்து பினராயி விஜயன் கூறியதாவது, கேரளாவில் தற்போது கொரோனா பரவல் குறைந்து வருகிறது. இதனால், மாநிலத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் அமலில் இருந்து வந்த முழு ஊரடங்கு ரத்து செய்யப்படுகிறது. வருகிற 28-ந் தேதி முதல் பள்ளி, கல்லூரிகள் வழக்கம் போல் காலை முதல் மாலை வரை முழு நேரமும் செயல்படும். பள்ளிகளில் ஆண்டு தேர்வுகளை மாணவ- மாணவிகள் எழுதும் வகையில், அதற்கு முன்னதாக பாடங்களை முடிக்க ஏதுவாக இந்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளது என்று அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com