

திருவனந்தபுரம்,
கேரளம் மாநிலத்தின் கடன் ₹5.07 லட்சம் கோடி என்றும், கடன் அல்லாத நிலுவை பொறுப்புகள் ₹48 ஆயிரத்து 733 கோடி எனவும் சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்ட வெள்ளை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.முதல்-மந்திரி ஆன பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், கேரளம் மாநிலத்தின் நிதிநிலை குறித்த வெள்ளை அறிக்கை விரைவில் வெளியிடப்படும் என அறிவித்தார். அதன்படி, நிதி நிலை குறித்த வெள்ளை அறிக்கை கேரள சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது.வெள்ளை அறிக்கையில் இடம்பெற்றுள்ள விவரங்கள் வருமாறு:-
கேரளம் மாநிலத்தின் மொத்த பொதுக்கடன் ₹5.07 லட்சம் கோடி. மாநிலத்தின் வருவாயில் 77 சதவீதம் சம்பளம், ஓய்வூ தியம், வட்டி செலுத்துதல் போன்றவற்றுக்கே செலவிடப்படு கிறது.இதனால், வளர்ச்சி பணிகளுக்கான நிதி மிகவும் குறைந்து விட்டது. மாநிலம் மிக அதிக அளவிலான நிதி பற் றாக்குறையை சந்தித்து வருகிறது.
இதன் காரணமாக மூலதன செலவினங்கள் மிக குறைந்த அளவாகவே நீடிக்கிறது. இது மாநிலத்தின் மொத்த உள் நாட்டு உற்பத்தியில் 1.3 சதவீதம் மட்டுமே. அதோடு, அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்களுக்கு வழங்க வேண்டிய அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரண நிலுவைகள் உள்பட மொத்தம் ₹48 ஆயிரத்து 733 கோடி அளவுக்கு நிலுவை பொறுப்புகளை புதிய அரசு ஏற்றுள்ளது.
கேரள உள்கட்டமைப்பு முதலீட்டு நிதி வாரியம் ₹21 ஆயிரம் கோடி அளவிலான நிலுவை கடன் பொறுப்புகளை கொண் டுள்ளது. கேரள பொதுத்துறை நிறுவனங்களின் ஒட்டுமொத்த இழப்பு ₹78 ஆயிரத்து 851 கோடியாக உயர்ந்துள்ளது. கேரள மாநில சாலை போக்குவரத்து கழகம், கேரள குடிநீர் வாரியம் போன்ற பொதுத்துறை நிறுவனங்களே இந்த உயர்வுக்கு முக்கிய காரணங்களாக அமைந்துள்ளன.சிறுபான்மையினர் நலன்களுக்கான திட்டங்களுக்கு ஒதுக்கப்படும் நிதி சமீப ஆண்டுகளில் குறிப்பிடத்தக்க அளவில் சரிந்துள்ளது. மேலும், எதிர்பார்த்ததைவிட குறைவாகவே மாநில வரி வருவாய்கள் ஈட்டப்பட்டுள்ளன. மத்திய அரசிடம் இருந்து கிடைக்கும் நிதியுதவியும் குறைந்துள்ளது. மாநிலத்தின் நிதி நெருக்கடிக்கு இவை முக்கிய காரணிகளாக அமைந்துள்ளன” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.