கேரளாவில் அனைத்து பேருந்துகளிலும் 31-ந்தேதிக்குள் சி.சி.டி.வி. கேமரா பொருத்தப்படும் - போக்குவரத்துத்துறை மந்திரி தகவல்

கேரளாவில் அனைத்து பேருந்துகளிலும் 31-ந்தேதிக்குள் சி.சி.டி.வி. கேமரா பொருத்தப்படும் என மாநில போக்குவரத்துத்துறை மந்திரி தெரிவித்துள்ளார்.
கேரளாவில் அனைத்து பேருந்துகளிலும் 31-ந்தேதிக்குள் சி.சி.டி.வி. கேமரா பொருத்தப்படும் - போக்குவரத்துத்துறை மந்திரி தகவல்
Published on

திருவனந்தபுரம்,

கேரள மாநிலத்தில் அரசு பேருந்துகள் உள்ளிட்ட அனைத்து பேருந்துகளிலும் வரும் 31-ந்தேதிக்குள் சி.சி.டி.வி. கேமரா பொருத்தப்படும் என அந்த மாநிலத்தின் போக்குவரத்துத்துறை மந்திரி அந்தோணி ராஜு தெரிவித்துள்ளார். கேமராக்களை கொள்முதல் செய்வதில் சற்று காலதாமதம் ஏற்பட்டதாகவும், இனி இதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட மாட்டாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஒவ்வொரு பேருந்தின் முன்புறம் மற்றும் பின்புறத்தில் கேமராக்கள் பொருத்தப்படும் என்று தெரிவித்த அவர், இந்த நடவடிக்கையின் மூலமாக பேருந்தின் உள்ளேயும், பேருந்துக்கு வெளியேயும் நடக்கும் விதிமீறல்களை எளிதாக கண்டறிய முடியும் என்று தெரிவித்துள்ளார்.

இது தவிர, வரும் நவம்பர் 1-ந்தேதி முதல் பேருந்துகள் உள்ளிட்ட கனரக வாகனங்களில் முன் இருக்கைகளில் அமர்ந்திருக்கும் ஓட்டுனர்கள் மற்றும் பயணிகள் சீட் பெல்ட் அணிய வேண்டும் என்றும் அந்தோணி ராஜு தெரிவித்துள்ளார். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com