சபரிமலைக்கு சென்ற சர்ச்சைக்குரிய பெண்ணியவாதி ரஹானா பாத்திமாவை போலீஸ் கைது செய்தது

சபரிமலை கோவிலுக்கு செல்ல முயற்சி செய்த சர்ச்சைக்குரிய பெண்ணியவாதி ரஹானா பாத்திமாவை போலீஸ் கைது செய்துள்ளது.
சபரிமலைக்கு சென்ற சர்ச்சைக்குரிய பெண்ணியவாதி ரஹானா பாத்திமாவை போலீஸ் கைது செய்தது
Published on

திருவனந்தபுரம்,

சபரிமலைக்கு அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு செப்டம்பரில் உத்தரவிட்டது. அக்டோபரில் கோவில் சிறப்பு பூஜைக்காக திறக்கப்பட்ட போது 8-க்கும் மேற்பட்ட பெண்கள் கோவிலுக்கு செல்ல முயற்சி செய்தார்கள். அய்யப்பன் கோவிலில் பெண்களை அனுமதிக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் தொடர்ந்த நிலையில் பலத்த பாதுகாப்புடன் இம்முயற்சி நடைபெற்றது. பக்தர்களின் அதிதீவிர போராட்டம் காரணமாக முயற்சி வெற்றியடையவில்லை. அக்டோபர் 19-ம் தேதி கோவிலுக்கு சர்ச்சைக்குரிய பெண்ணியவாதி ரஹானா பாத்திமா செல்ல முயற்சி செய்தனர். அவருக்கு எதிராக பல்வேறு விமர்சனங்கள் எழுந்தது.

கோவிலுக்கு செல்வதற்கு முன்னதாக மாலை அணிந்து, சபரிமலைக்கு கோவிலுக்கு செல்லும் போது உடுக்கும் ஆடையை அணிந்துக்கொண்டு அவர் வெளியிட்ட புகைப்படம் முகம் சுழிக்கச்செய்தது. இதனையடுத்து அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.

இப்போது கேரள மாநில போலீஸ் ரஹானா பாத்திமாவை கைது செய்துள்ளது. மத உணர்வுகளை இழிவுப்படுத்தும் வகையில் பேஸ்புக்கில் போஸ்டிங் வெளியிட்ட விவகாரத்தில் வழக்குப்பதிவு செய்து போலீஸ் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com