தனது லெஸ்பியன் தோழியை குடும்பத்தினர் சிறைபிடித்து வைத்துள்ளனர்.. இளம்பெண் கோர்ட்டில் ஆட்கொணர்வு மனு

கேரளா மாநிலம் மலப்புரத்தைச் சேர்ந்தவர் சுமையா ஷெரின்( 21) இவர தனது லெஸ்பியன் பார்ட்னர் ஹபீபாவை கண்டுபிடித்து தரக்கோரி ஐகோர்ட்டில் ஆட்கொணர்வு மனு ஒன்றை தாக்கல் செய்து உள்ளார்.
தனது லெஸ்பியன் தோழியை குடும்பத்தினர் சிறைபிடித்து வைத்துள்ளனர்.. இளம்பெண் கோர்ட்டில் ஆட்கொணர்வு மனு
Published on

திருவனந்தபுரம்,

கேரளா மாநிலம் மலப்புரத்தைச் சேர்ந்தவர் சுமையா ஷெரின்( 21) இவர தனது லெஸ்பியன் பார்ட்னர் ஹபீபாவை கண்டுபிடித்து தரக்கோரி ஐகோர்ட்டில் ஆட்கொணர்வு மனு ஒன்றை தாக்கல் செய்து உள்ளார்.ஹபீபாவை அவரது குடும்பத்தினர் கடத்திச் சென்று சிறை வைத்துள்ளதாக குற்றம் சாட்டியுள்ளார்.

ஒன்றாக வாழ்வதற்காக ஜனவரி 27-ம் தேதி வீட்டை விட்டு வெளியேறினோம். எங்கள் வழக்கை மலப்புரம் மாஜிஸ்திரேட் கோர்ட் முடித்து வைத்தது. சேர்ந்து வாழ உத்தரவு கிடைத்தது. ஒன்றாக வாழ்ந்து கொண்டிருந்த போது வந்து கடத்தியுள்ளனர் என சுமையா கூறி உள்ளார்.

இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்த போது, ஜூன் 9, வெள்ளிக்கிழமை அன்று நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு குடும்பத்தினருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தாலும், குடும்பத்தினர் சம்மதிக்கவில்லை என்று கூறப்படுகிறது. ஹபீபா குடும்பத்தினர் தரப்பு வழக்கறிஞர் பத்து நாள் அவகாசம் கேட்டதோடு 19-ம் தேதி ஆஜர்படுத்துவதாக கூறினார்.அதை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com