

கேரளா,
கேரள மாநிலத்தில் 15 வயது சிறுமி பலாத்கார வழக்கில் தொடர்புடைய தொழிலாளிக்கு 95 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டு உள்ளது.
இதுதொடர்பான வழக்கு விசாரணை வர்க்கலா போக்சோ விரைவு கோர்ட்டில் நடைபெற்று வந்தது. வழக்கின் இறுதி கட்ட விசாரணை முடிவடைந்த நிலையில் நேற்று நீதிபதி பரபரப்பு தீர்ப்பை அளித்தார். அதில், குற்றம் சாட்டப்பட்ட மனோஜை குற்றவாளி என அறிவித்த அவர் 95 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டார்.