

2017-ம் ஆண்டு கேரளாவிலிருந்து 20-க்கும் அதிகமானோர் ஆப்கானிஸ்தான் சென்று ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தில் இணைந்தனர். இவர்களில் ஒருவர் முகமது முகாஷின் என்ற கல்லூரி மாணவர். திருச்சூரில் உள்ள கல்லூரியில் என்ஜினியரிங் படித்த இளைஞர் வீட்டைவிட்டு வெளியேறி ஆப்கானிஸ்தானில் உள்ள பயங்கரவாத இயக்கத்தில் இணைந்தது தெரியவந்தது. இதுதொடர்பாக போலீஸ், மத்திய உளவுப்பிரிவு விசாரணையை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், ஆப்கானிஸ்தானில் பயங்கரவாதிகளை குறிவைத்து ஆப்கானிஸ்தான் மேற்கொண்ட தாக்குதலில் முகமது முகாஷின் உயிரிழந்தான் என்று தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக 10 நாட்களுக்கு முன்னதாக வாலிபரின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.