கேரளாவை சேர்ந்த கவிஞர் அக்கிதமுக்கு ஞானபீட விருது

கேரளாவை சேர்ந்த கவிஞர் அக்கிதமுக்கு ஞானபீட விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
கேரளாவை சேர்ந்த கவிஞர் அக்கிதமுக்கு ஞானபீட விருது
Published on

கோழிக்கோடு,

எழுத்துலகில் சாதனை படைப்பவர்களுக்கு ஆண்டுதோறும் ஞானபீட விருது வழங்கப்படுகிறது. இந்திய இலக்கிய துறையின் மிக உயரிய விருதான ஞானபீட விருது, இந்த ஆண்டு மலையாள கவிஞர் அக்கிதம் அச்சுதன் நம்பூதிரி என்ற அக்கிதமுக்கு (வயது 93) அறிவிக்கப்பட்டு உள்ளது.

மலையாள இலக்கியத்துறையின் எளிய கவிஞர் என புகழப்படும் அக்கிதம், இதயத்தை ஈர்க்கும் உணர்வுப்பூர்வ படைப்புகளுக்கு சொந்தக்காரர் ஆவார். இதனால் கேரளாவின் இலக்கிய மேதை என அழைக்கப்பட்டு வருகிறார். 45-க்கும் மேற்பட்ட கவிதை, சிறுகதை, நாடக தொகுப்புகளை வெளியிட்டு இருக்கிறார்.

இருபதாம் நூற்றாண்டின்றே இதிகாசம் என்ற அவரது கவிதை தொகுப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது. இதைப்போல அக்கிதம் மொழிபெயர்த்து வெளியிட்ட ஸ்ரீமத் பாகவதம், அவரது வாழ்க்கையின் மிகப்பெரிய மதிப்புமிக்க நூலாக இன்றுவரை புகழப்படுகிறது.

அக்கிதமுக்கு ஞானபீட விருது அறிவிக்கப்பட்டு இருப்பதன் மூலம், மலையாள இலக்கியத்துறையில் இந்த விருதை பெறும் 6-வது கவிஞர் என்ற சிறப்பை இவர் பெற்றுள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com