மண்டல பூஜை; சபரிமலை கோயில் நடை திறப்பு

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பக்தர்கள் வருகைக்கு கடும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
மண்டல பூஜை; சபரிமலை கோயில் நடை திறப்பு
Published on

திருவனந்தபுரம்,

சபரிமலை அய்யப்பன் கோயில் மகரவிளக்கு மற்றும் மண்டல பூஜைக்காக வரும் இன்று நடை திறக்கப்பட்டது. சபரிமலை கோயிலின் மேல்சாந்தி, மாலிகபுரம் கோயில் மேல்சாந்தி, ஆகியோர் பங்கேற்றனர். விழாவில் தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு கலச பூஜை மற்றும் அபிஷேகம் நடத்தினார்.

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பக்தர்கள் வருகைக்கு கடும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் ஆன்லைனில் முன்பதிவு செய்து, அவர்கள் தரிசனத்துக்கு வரும் நாளில் 48 மணி நேரத்துக்கு முன் கொரோனா பரிசோதனை செய்து நெகட்டிவ் சான்றிதழ் கொண்டுவருவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மேலும், தடுப்பூசி செலுத்தியிருத்தலும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் முன்பதிவு மூலம் தினமும் 30 ஆயிரம் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளன.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com