ஏடிஎம் கொள்ளை கும்பலின் முக்கிய நபர் கைது


ஏடிஎம் கொள்ளை கும்பலின் முக்கிய நபர் கைது
x

பிரபல கொள்ளை கும்பலின் 32 வயது முக்கிய நபரை டெல்லி போலீசார் கைது செய்தனர்.

புது டெல்லி

பல்வேறு எடிஎம் எந்திரங்களில் கைவரிசை காட்டிய பிரபல பரூக் கொள்ளை கும்பலின் 32 வயது முக்கிய நபரை டெல்லி போலீசார் கைது செய்தனர்.

குற்றம்சாட்டப்பட்ட குற்றவாளியான ஜாஹித் அரியானாவின் மேவாட்டைச் சேர்ந்தவர். இவரது குற்றப்பதிவில் டெல்லி, அரியானா, மராட்டியம், ஒடிசா, மற்றும் சென்னை போன்ற இடங்களில் உள்ள ஏடிஎம் திருட்டுகள் மற்றும் ஆயுதக் கொள்ளை தொடர்பான 35க்கும் மேற்பட்ட வழக்குகள் அடங்கும்.

மேலும் இவர் பாதுகாப்பற்ற ஏடிஎம்களை குறிவைத்து, கட்டர் எந்திரங்களைப் பயன்படுத்தி சில நிமிடத்திலேயே கொள்ளையடித்து தப்பிச்செல்லுன் திரன் பெற்றவர். அவரது கும்பல் பாதுகாப்பு கேமராவில் பெயிண்ட்டை தெளிப்பதோடு பிடிபடுவதைத் தவிர்க்க ஆயுதங்களுடன் கொள்ளையடித்து தப்பி செல்வதை வழக்கமாக வைத்திருந்தனர்,

இந்நிலையில் மராட்டியத்தின் குருகிராமில் ஜாஹித்தை கண்காணித்து வந்த போலீசார் அவரை கைது செய்தனர். இவர் 2012ஆம் ஆண்டு டெல்லியில் ஏடிஎம் திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டு பின் ஜாமீன் பெற்று மீண்டும் இந்த கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு வருகிறார்.

1 More update

Next Story