'காலிஸ்தான்' தனிநாடு குறித்த தகவல் 12-ம் வகுப்பு பாடநூலில் நீக்கம்: என்.சி.இ.ஆர்.டி. முடிவு

‘காலிஸ்தான்’ தனிநாடு குறித்த தகவல்களை 12-ம் வகுப்பு பாடநூலில் நீக்கம் செய்ய என்.சி.இ.ஆர்.டி. முடிவு செய்துள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

புதுடெல்லி,

'காலிஸ்தான்' எனப்படும் தனி சீக்கிய நாடு கோரிக்கை குறித்த தகவல், சி.பி.எஸ்.இ. 12-ம் வகுப்பு அரசியல் அறிவியல் பாடப்புத்தகத்தில் இடம்பெற்றிருந்தது.

அதுகுறித்து, சீக்கியர்கள் பற்றிய வரலாற்றுத் தகவல்கள் தவறுதலாக இடம்பெற்றுள்ளதாக சிரோமணி குருத்வாரா பிரபந்த கமிட்டி கடந்த மாதம் எதிர்ப்பு தெரிவித்திருந்தது.

இந்நிலையில், 12-ம் வகுப்பு பாடப்புத்தகத்தில், குறிப்பிட்ட தகவல் பற்றிய வாசகங்களை நீக்க தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (என்.சி.இ.ஆர்.டி.) முடிவு செய்துள்ளது.

சிரோமணி குருத்வாரா பிரபந்த கமிட்டியின் எதிர்ப்பை தொடர்ந்து, இதுகுறித்து ஆராய ஒரு நிபுணர் குழுவை என்.சி.இ.ஆர்.டி. அமைத்தது. அந்தக் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில், குறிப்பிட்ட தகவலை நீக்கி, மாற்றி அமைக்க முடிவு செய்துள்ளது.

ஆனால் புதிய கல்வியாண்டுக்கான புத்தகங்கள் ஏற்கனவே அச்சிப்பட்டுவிட்ட நிலையில், டிஜிட்டல் புத்தகங்களில் இந்த மாற்றம் உடனடியாக செய்யப்படும் என மத்திய கல்வி அமைச்சக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com