கடைசி மூச்சுவரை அரியானா மக்களுக்கு சேவை செய்வேன் - மனோகர் லால் கட்டார் பேட்டி

அரியானாவில் கர்னால் சட்டமன்ற எம்.எல்.ஏ. பதவியை முன்னாள் முதல்-மந்திரி மனோகர்லால் கட்டார் ராஜினாமா செய்துள்ளார்.
கடைசி மூச்சுவரை அரியானா மக்களுக்கு சேவை செய்வேன் - மனோகர் லால் கட்டார் பேட்டி
Published on

கவுகாத்தி,

அரியானாவின் புதிய முதல்-மந்திரியாக பா.ஜ.க.வை சேர்ந்த நயப் சிங் சைனி நேற்று பதவியேற்று கொண்டார். இந்தநிலையில், வரும் மக்களவைத் தேர்தலில் மனோகர் லால் கட்டார் கர்னால் தொகுதியில் போட்டியிடலாம் என்ற யூகங்களுக்கு மத்தியில், அரியானா மாநில முன்னாள் முதல்-மந்திரி எம்.எல் கட்டார் இன்று தனது கர்னால் சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார்.

கர்னால் தொகுதியை புதிதாக பதவி ஏற்றுள்ள முதல்-மந்திரி நயாப் சிங் சைனி கவனித்துக்கொள்வார் என்று மனோகர் லால் கட்டார் தெரிவித்தார். கடந்த ஒன்பதரை ஆண்டுகளாக, நான் சட்டமன்ற கட்சித் தலைவராகப் பணியாற்றியுள்ளேன். எனது கடைசி மூச்சு வரை அரியானா மக்களுக்குச் சேவை செய்வேன் என்று கட்டார் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com