சிறுநீரக மோசடி வழக்கு: ஐகோர்ட்டு உத்தரவை எதிர்த்த தமிழக அரசு மனு மீது இன்று விசாரணை

ராசிபலன்
ஐகோர்ட்டின் உத்தரவை எதிர்த்து தமிழ்நாடு அரசின் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டிருந்தது.
புதுடெல்லி,
பரமக்குடியை சேர்ந்த சத்தீஸ்வரன், நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையத்தில் உள்ள விசைத்தறி தொழிலாளர்களிடம் ஏழ்மையை பயன்படுத்தி சட்டவிரோதமாக சிறுநீரக தானம் பெற்று மோசடி நடந்துள்ளது. தற்போது திருச்சி மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில் உள்ள சில மருத்துவமனைகளிலும் இதுபோன்ற மோசடிகள் நடந்ததாக தகவல்கள் வருகின்றன. இதுபற்றி சி.பி.ஐ. விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, சிறுநீரக மோசடி குறித்து விசாரணை நடத்த தென்மண்டல ஐ.ஜி. பிரேமானந்த் சின்ஹா தலைமையில் ஐ.பி.எஸ். அதிகாரிகள் நிஷா, சிலம்பரசன், கார்த்திகேயன், அர்விந்த் ஆகியோர் கொண்ட குழுவை நியமித்து உத்தரவிட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து தமிழ்நாடு அரசின் சார்பில் வக்கீல் ரீஷ் சுப்ரமணியன் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்திருந்தார். அந்த மனுவை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் ஜே.கே. மகேஸ்வரி, என்.வி அஞ்சரியா அடங்கிய அமர்வு இன்று (வெள்ளிக்கிழமை) விசாரிக்கிறது.






